காப்பிய தமிழ்
2. அவள் வேண்டல் யானைத் தீநோய் அகவயிற் றடக்கிய காயசண்டி கையெனும் காரிகை வணங்கி, *நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி, அடலரும் முந்நீர் அடைத்த ஞான்று, குரங்குகொணர்ந் தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யளக்கர் வயிறு புக்காங்கு இட்ட தாற்றாக் கட்டழற் கடும்பசிப் பட்டேன், என்றன் பழவினைப் பயத்தால்; 10 அன்னை, கேள்நீ ஆருயிர் மருத்துவி; துன்னிய என்னோய் துடைப்பாய்!" என்றலும்- 15 "யானைத்தீ' எனப்படும் தீராத பெரும்பசியான நோயினைத் தன் வயிற்றினிடத்தே கொண்டிருந்த அக் காயசண்டிகை, மணிமேகலையை வணங்கி, உரைப்பாளாயினாள்; "நெடியோளாகிய திருமால் மயக்கமுற்று இந் நிலவுவகத்தே வந்து இராமனாகத் தோன்றினான். அக்காலத்தே, வெற்றி கொள்வதற்கு அரிதான கடலினைக் கடந்து இலங்கைக்குச் செல்லுதற் பொருட்டாக, அதனை அணையிட்டு அடைத்தலை யும் மேற்கொண்டான். அவ்வேளையில் குரங்குகள் பெருமைகள் பலவற்றையும் கொணர்ந்து கடலுள் எறிந்தன. அவையெலாம் தெய்வத் தன்மையினையுடைய கடலினது வயிற்றகத்தே புகுந்து புகுந்து மறைந்து போயின அங்ஙனமே, இட்ட உணவுப் பொருள்கள் எவ்வளவினாலும் தணியாது, மிக்கெழுந்து அழலுகின்ற கொடிய பசியாகிய நோயிலே, என் பழவினைப் பயன் ...